தசமபாகத்தைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது?

அநேக கிறிஸ்தவர்கள் தசமபாகத்தைக் குறித்த விவகாரத்தில் போராட்டம் உடையவர்களாக இருக்கிகிறார்கள். சில சபைகளில் தசமபாகத்தைக் குறித்து அதிகமாக கூறுகிறார்கள். அதே சமயம், அநேக கிறிஸ்தவர்கள், வேதாகமத்தில் தசமபாகத்தைக் குறித்து கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. தசமபாகம் அல்லது கொடுத்தல் என்பது சந்தோஷமும், ஆசீர்வாதமும் ஆகும். ஆனால் இன்று சில சபைகளில் இது இல்லாதது வருந்தத்தக்க விஷயம் தான்.

தசமபாகம் கொடுத்தல் என்பது பழைய ஏற்பாட்டின் கருத்துப்படிவம் ஆகும். நியாயப்பிரமாண சட்டத்தின்படி, இஸ்ரவேலர்கள் தாங்கள் சம்பாதித்த எல்லாவற்றிலும் அதாவது அவர்களுடைய விளைச்சல் மற்றும் கால்நடைகளில் பத்தில் ஒரு பங்கு தசமபாகமாக ஆசரிப்பு கூடாரம் / தேவாலயத்தில் கொடுக்க வேண்டும் (லேவியராகமம் 27:30, எண்ணாகமம் 18:26, உபாகமம் 14:24, 2 நாளாகமம் 31:5). பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணம் பல தசமபாகங்களை செலுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறது உதாரணமாக ஒன்று லேவியர்களுக்கு, ஒன்று ஆலயத்தின் பயன்பாடு மற்றும் பண்டிகைகளுக்கு, மற்றும் ஒன்று தேசத்தில் ஏழையாக இருக்கிறவர்களுக்கு என பழையேற்பாட்டின் நியாயப்பிரமாணச் சட்டப்படி, இந்த தசமபாகம் அநேக மடங்காய், அதாவது 23.3% கொடுக்கப்பட வேண்டும். சிலர் இந்த பழையேற்பாட்டில் சொல்லப்பட்ட தசமபாகத்தை, ஆலயத்தில் பணிவிடை செய்கிற லேவியர்கள் மற்றும் பலிமுறைமைகளுக்கு கொடுப்பதற்காக இதை ஒரு வரி வசூலிக்கும் முறையாக புரிந்து கொள்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டில், எந்த இடத்திலும் கிறிஸ்தவர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டும் மற்றும் அதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும் என்கிறதான கட்டளையும் இல்லை பரிந்துரையும் இல்லை. மேலும் புதிய ஏற்பாட்டில் தசமபாகம்-அதாவது தன் வருமானத்தில் சில சதவீதம் எடுத்து வைக்க வேண்டும் எனவும் கூறவில்லை. மாறாக “தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 16:2) என்றுதான் கூறுகிறது. ஆனால் சில கிறிஸ்தவ சபைகளில் பழையேற்பாட்டில் கூறப்பட்ட 10% (சதவிகிதத்தை) எடுத்துக்கொண்டு, குறைந்தபட்சம் இத்தனை சதவிகிதம் கொடுக்கவேண்டும் பரிந்துரைக்கிறார்கள்.

புதியேற்பாட்டில் கொடுப்பதின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை குறித்து பேசுகிறது. நம்மால் எவ்வளவு கொடுக்கமுடியுமோ அவ்வளவாக நம்முடைய திராணிக்கு தக்கதாக கொடுக்கவேண்டும். சில சமயங்களில் 10%க்கு அதிகமாக கொடுக்கலாம் சில சமயங்களில் 10%க்கு குறைவாக கொடுக்கலாம். இது கொடுக்கிறவர்களின் திராணி மற்றும் கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையினுடைய தேவைகளை பொறுத்து அமைகிறது. கர்த்தருக்கு கொடுக்ககூடிய காரியத்தில் ஒவ்வொருவரும் கருத்தோடு ஜெபம் செய்து தேவைகளையும் தங்கள் திராணியையும் கருத்தில்கொண்டு சந்தோஷத்தோடு கொடுக்கவேண்டும் (யாக்கோபு 1:5). எல்லாவற்றிற்கும் மேலாக,எல்லா தசம பாகங்களும் காணிக்கைகளும் நல்மனதின் சுபாவத்தோடு தேவனுக்கேற்கிற ஆராதனையாக கருதிக்கொண்டு கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபைக்கு கொடுக்கவேண்டும். “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7).

Default image
admin
Articles: 21

Leave a Reply

%d bloggers like this: