அநேக ஜனங்கள் இன்று சபை என்றால் ஒரு கட்டிடம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். வேதம் சபையைக் குறித்து போதிப்பது இது அல்ல. ‘சபை’ என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான ‘எக்ளிசியா’ விலிருந்து வருகிறது, அதற்கு ஒரு ‘‘கூடுகை’’ அல்லது ‘‘ அழைக்கப் பட்டவர்கள்’’ என்று அர்த்தமாம். சபை என்ற வார்த்தைக்கு அடித்தளத்தைப் பார்ப்போமனால் அது கட்டிடத்தையல்ல…
சபையானது கடைபிடித்து ஆசரிக்கவேண்டுமென்று இயேசு நிறுவி ஆரம்பித்து வைத்த இரண்டு சடங்குகள் அல்லது ஆசரிப்புகளில் ஒன்றுதான் இந்த கிறிஸ்தவ ஞானஸ்நானம். இயேசு பரமேறிச் செல்லுவதற்கு முன்பதாக, “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;…
முதன்முதலில் அந்நிய பாஷைகளில் பேசும் சம்பவம் அப்போஸ்தலர் நடபடிகள் 2:1-4ல் குறிப்பிட்டுள்ளபடி பெந்தெகோஸ்தே நாளில்தான் பேசினதாக பார்க்கிறோம். அப்போஸ்தலர்கள் திரளான மக்களுடன் அவர்களுடைய மொழிகளிலேயே சுவிசேஷத்தை பகிர்ந்து கொண்டார்கள்: “நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்” (அப் 2:11). அந்நியபாஷை என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க சொல்லின் நேரடியான பொருள் “மொழிகள்” என்பதாகும்.…
தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம், தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்றும் அவர் எப்படிப்பட்டவராக இல்லை என்றும் கூறுகிறது. வேதாகமத்தின் அதிகாரத்திற்குட்பட்ட நிலையில் அல்லாமல் தேவனுடைய பண்புகளை விளக்க முயற்சிக்கும் அனைத்து முயற்சிகளும் வெறுமனே ஒரு அபிப்ராயம் அல்லது கருத்து மட்டுமே ஆகும். இது பெரும்பாலும் சரியானதாக இருப்பதில்லை, குறிப்பாக தேவனைக்குறித்து அறிந்துகொள்கிற விஷயத்தில் இந்த அபிப்ராயங்கள் அனைத்தும்…
தேவனுடைய சித்தத்தை தெரிந்துகொள்கிற காரியம் முக்கியமானதாக இருக்கிறது. தேவனை அறிந்து அவர் சித்தத்தின்படி செய்கிறவர்களே தம்முடைய மெய்யான உறவுகள் என இயேசு கூறினார்: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மாற்கு 3:35). இரண்டு குமாரர்களைக் குறித்த உவமையில், பிதாவினுடைய சித்தத்தை செய்ய தவறிய…
தேவன் இருக்கிறாரா? என்கிற கேள்வியைப்போல் அல்லாமல், ஒரு சிலர் மட்டுமே இயேசு கிறிஸ்து ஜீவித்திருந்தாரா? என்று கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் முழுமையான தனித்துவத்தைக் கூறும்போது தான் விவாதமே வருகிறது. உலகில்…
நான் எனது விசுவாசத்தை இயேசுவின்மேல் வைத்திருக்கிறேன்… இப்பொழுது அடுத்து என்ன? வாழ்த்துக்கள்! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிற ஒரு தீர்மானத்தை எடுத்து இருக்கிறீர்கள்! “இப்பொழுது என்ன?” தேவனோடு எனது பயணத்தை எப்படி ஆரம்பிப்பது? வேதாகமத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து படிகள் வேதாகமத்திலிருந்து உங்களுக்கு சரியான திசையைக் காண்பித்து வழி நடத்தும். உங்களுடைய இந்த…
நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள் என்பதற்கு இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன என்பதை வேதாகமம் மிகவும் திட்டவட்டமாக கூறுகிறது: அதாவது பரலோகம் அல்லது நரகம் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும் என்பதை வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. எப்படி? தொடர்ந்து வாசியுங்கள். முதலாவது, பிரச்சனை. நாம் அனைவரும்…
இந்த எளிமையான, இருப்பினும் ஆழ்ந்த கேள்வியாகிய கேட்கப்படும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால்: “நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?”, இந்த உலகில் நம் வாழ்வு முடிந்தபின் நித்தியத்தை நாம் எங்கே செலவிடுவோம் என்பதைக் குறித்ததாகும். நம்முடைய நித்தியத்தை விட வேறே முக்கியமான விடயம் எதுவும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, ஒரு நபர் எப்படி இரட்சிக்கப்படுகிறார் என்பதைப் பற்றி…
மரணத்திற்குப் பின்பு வாழ்வு உண்டா என்பது ஒரு உலகளாவிய கேள்வியாகும். நம்மெல்லாரையும் அவரோடு உட்படுத்திக்கொண்டு யோபு இவ்வாறு கேட்கிறார், “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைபோல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்… மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” (யோபு 14:1-2, 14). யோபுவைப்போலவே நம் அனைவருக்கும் இந்த கேள்வி ஒரு…